KPN's ongoing Novels.
The list shows Krishnapriya Nrayan's Ongoing novels.
317Aalangatti Mazhai
The story of Amirthavarshini & Krishna
15TIK
திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு!
8Monisha Novels
Welcome! Have a look around and join the conversations.
2Kanavar Thozha
Welcome! Have a look around and join the conversations.
1Madhivadhani Stories (Ongoing)
Welcome! Have a look around and join the conversations.
30Inai Kodukal - இணை கோடுகள்
Welcome! Have a look around and join the conversations.
10மஞ்சக்காட்டு மயிலே
Madhivadhani's New Novel.
20Book Promotion Episodes
Sample Episodes for the promotion of New Books.
4- 209
Nilamangai
யார் சொன்னார்கள்... நிமிர்ந்து விண்ணைத் தொட்டால்தான் கனவுகளுக்குப் பெருமையென்று? என் கனவுகள் என்றும் வானம் பார்க்காது!
22Kaattu Malli
காட்டு மல்லிக்குக் காவல்கள் இல்லை!.
24Valasai Pogum Paravaikalaai!
The story of three friends, Anju, Kuyili and Thanga Mayil.
27Poove Un Punnagayil!
நேரடி புத்தகமாக வெளிவந்திருக்கும் எனது அடுத்த புதினம்.
34Uyirieye! உயிரியே!
A Novel By Monisha And KPN
10En Manathai aala Vaa...!
Welcome! Have a look around and join the conversations.
40Thookanam Kuruvikal.
தூக்கணாம் குருவிகள்.
1Kadhal Va..Radha?
காதல் வ..ராதா?
10Mathini Yamini
(MaYa)
12Azhage Sugamaa (R U Okay Baby)
Short & Sweet Romantic Thriller
2Poovum Naanum Veru!
Story available as book!
4ANIMA
Anbenum Idhazhkal Malarattume (ANIMA)
10Nee Sonna Oor Varthaikaga
A simple love story!
13 Audio Novels
YouTube Links of Audio Novls
0சிறுகதைகள்/Short Stories.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. சிறுகதைகளும் அப்படியே!
9கட்டுரைகள்/Articles
(கட்டுரைத் தொடர்)
9KPN கட்டுரைகள்
Welcome! Have a look around and join the conversations.
5Vithai Panthu
விதைப்பந்து கட்டுரை தொடர் by மோனிஷா & KPN
4கவிதைகள்.
என் பாட்டு திறந்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்... மஹாகவி பாரதியார்!
0Children books
சிறுவர்களுக்கான கதைகள்/ A Space for children!
1Saahithyan's Stories
சிறுவர்களுக்கான கதைகள்/ A Space for Kids!
0KPN Stories
Welcome! Have a look around and join the conversations.
1Padithen Pagirnthen
The Readers Club
2Announcements
Welcome! Have a look around and join the conversations.
5
- Aalangatti Mazhaiவணக்கம் அன்பு தோழமைகளே 💖 என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் அன்பான வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கதைக்கான அப்டேட்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாரம் இரண்டு பதிவுகளாவது கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையில்தான் மீண்டும் தொடர்கிறேன். முக்கியமாக, ஆலங்கட்டிமழை கதை பற்றி முக்கியமான ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கனவே நான் காட்டுமல்லி டைட்டில் வைத்தபொழுது ஏற்பட்ட ஒரு மன வருத்தம் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கவே இந்த டிஸ்க்ளைமர். வர்ஷிணி மெமரி லாஸ் ஆகி அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை இந்த 15 எபிசோட் வரைக்கும் படித்தவர்கள் கொஞ்சமாக கெஸ் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். ரஞ்சனிக்கு Triplets அதாவது ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் என்பது தெரியும். அந்த மூன்று குழந்தைகளை ஒரு குழந்தை வர்ஷிணிக்கு பிறந்த குழந்தை - கதையின் ஒரு முக்கியமான இந்த சஸ்பென்ஸை நான் இங்கே ரிவீல் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதுகிறேன். காரணம் விரைவில் தெரிய வரும். லாஜிக் பற்றியெல்லாம் உங்களுக்கு நிறையக் கேள்வி வரலாம். அதையெல்லாம் கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள். கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Happy Reading, Friends 💖 நட்புடன், KPN AKM Episodes 1 - 14 ஆலங்கட்டிமழை Episode - 15 Episode - 15 Part - 1 Part 2 cont... “இரு மொதல்ல காஃபி ஃபில்டர் எங்க இருக்குன்னு காமிக்கறேன்” என்றபடி வந்து பாத்திரம் வைக்கும் அலமாரியைத் திறந்தாள் ரஞ்சனி. “ஐயோ! என்னக்கா இது? சைஸ் வாரியா இத்தனை பில்டர் இருக்கு? இத பாத்தா, காபி போட வாங்கி வச்சிருக்கிற மாதிரி தெரியல. சீன் போட வாங்கி வச்சிருக்க மாதிரிதான் இருக்கு ஹா… ஹா…” “நீ சொன்ன ரெண்டுமே கரெக்டுதான். காபி போடறதுக்குன்னு சொன்னாலும், சீன் போடறதுதான் முக்கியமான காரணம். இந்த மாதிரி பாத்திரமா வாங்கிக் குவிக்கறதுல என் மாமியாருக்கு ஒரு அப்சஷன். விட்டா அவங்க வாங்குற பென்ஷன் மொத்தத்துக்கும் பாத்திரம்தான் வாங்குவாங்க” “சரியான ஆளுதான்கா நீ. அவங்க வீட்ல இல்லங்கற தைரியத்துலதான இப்படி ஓப்பனா கலாய்க்கிற” “போடி நீ வேற… நான் இப்படி பேசறது மட்டும் உங்க அத்தான் காதுலயோ இல்ல கிருஷ்ணா காதுலயோ விழுந்துது, ‘எங்க அம்மா எங்க எவ்வளவு கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தாங்க தெரியுமா?’ன்னு ஆரம்பிச்சு என் காதுல ரத்தம் வர அளவுக்கு அவங்க அம்மா பெருமைய பாடுவாங்க. அதோட விட்டா கூட பரவாயில்லை. மூட்ட மூட்டையா அட்வைஸ் பண்ணி என் மூளைய கழுவி கவுப்பாங்க” அக்காவின் புலம்பலை கேட்டு, "அப்ப, நம்ம அம்மா நம்மள தவிட்டுக்கு வாங்கி, தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா என்ன?" என்று கேட்டு கலகலவென சிரித்தாள் வர்ஷிணி. அந்தச் சிரிப்பு சத்தம் ஹாலில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணாவின் காதில் நன்றாக விழுந்தது. ஒரு பெண்ணின் அதிர்ந்த இப்படியொரு சிரிப்பு இந்த வீட்டுக்குப் புதிது. ‘எப்படி பிசாசு மாதிரி சிரிக்குது பாரு, அராத்து’ என்று அவன் மனதுக்குள் முட்டி மோதினாலும், உண்மையில் அந்தச் சிரிப்பு, சோர்ந்து போய் இருந்த அவனது மனதில் ஒரு புத்துணர்ச்சியைக் கொண்டு வந்து நிரப்பியது என்பதே உண்மை. “ஏ லூசு, நம்ம வீட்டு நினைப்புல அதே மாதிரி இங்க வந்து உன்னோட சேட்டையெல்லாம் செய்யாத. தப்பா போகும்” எனப் பதறினாள் ரஞ்சனி. “அக்கா, இதுக்கெல்லாம் கூடவா இங்க கேட் போடுவாங்க. நம்ம அப்பாவே பரவாயில்ல போலிருக்கே” “ஏய் சத்தமா பேசி தொலையாதடி. கிருஷ்ணா ஹால்ல தான் உட்கார்ந்துட்டு இருக்காரு” “அவர் கூட உங்க வீட்ல யூத் கிடையாதா? குடும்பம் மொத்தமுமா இப்படி பூமரா இருக்கும்?” கையால் வாயை மூடிக்கொண்டு சத்தம் இல்லாமல் குலுங்கிச் சிரித்தாள் ரஞ்சனி. இருப்பதிலேயே சிறியதாக இருந்த ஒரு ஃபில்டரை எடுத்து காபி பொடி போட்டு டிகாக்ஷனுக்கு தயார் செய்தாள். “கிருஷ்ணாவ கம்பேர் பண்ணும் போது உங்க அத்தான் அவ்வளவு மோசம் இல்லதான். ஆனாலும் அம்மாவுக்கு பயப்படுவாரு” “ அப்படின்னா கிருஷ்ணா அவங்க அம்மாவுக்கு பயப்பட மாட்டாரா” “ம்ஹூம்… இல்ல, அவங்க அம்மாவுக்கு தான் கிருஷ்ணாவ பார்த்தா கொஞ்சம் பயம். சமயத்துல அவங்கள நல்லா வச்சு செய்வாரு. ஆனாலும் அம்மாவோட கருத்துக்கு எதிரா நடந்துக்கவே மாட்டார்” “ஓ” “ஆமாம், வர்ஷிணி. எங்க நிச்சயதார்த்தத்துக்கு முன்னால பர்ச்சேஸ் போயிருந்தோம் இல்ல, அப்ப கிருஷ்ணாதான் அவங்க அம்மாவ கன்வின்ஸ் பண்ணி, ஸ்ரீதர் என் கூட தனியா பேச பர்மிஷன் வாங்கி கொடுத்தாரு. அதே மாதிரி எல்லாமே எனக்கு புடிச்சதா, என்ன கூட்டிட்டு போய்தான் வாங்கணும்னு சொல்லி வீட்டில பிரஷர் போட்டதும் அவர்தான்” “இதையெல்லாம் அத்தானே செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல. ப்ச், இதுக்கெல்லாம் எதுக்கு தம்பியோட ரெக்கமண்டேஷன்” “என்ன பண்றது வர்ஷிணி, அவரோட சிச்சுவேஷன் அந்த மாதிரி. எப்பவுமே குடும்பத்துல அதிகமா சம்பாதிக்கிற பிள்ளையோட கைதான ஓங்கி இருக்கும். உங்க அத்தான் இன்னும் கூட இன்டிபென்டன்ட்டா செட்டில் ஆகலியே!” வருத்தம் தோய்ந்த குரலில் ரஞ்சனி சொல்லவும் அவளுடைய திருமணத்தில் அப்பாவின் அவசரக் குடுக்கை தனத்தை நினைத்து வர்ஷிணிக்குக் கோபம் கனன்றது. ஆனாலும் முடிந்ததைப் பேசி பயனில்லை என்று மனதை அடக்கிக் கொண்டாள். வர்ஷிணியின் மௌனம் ரஞ்சனிக்கு புரிய, “ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த குடும்பத்தை பொறுத்த வரைக்கும் கிருஷ்ணா எனக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட். எனக்கும் சரி, ஸ்ரீதருக்கும் சரி ரொம்ப சப்போர்ட் பண்ணுவாரு. அவருக்கு சின்ன அண்ணன்னா உசுரு” என்றாள் மனதார. “பரவால்ல, என் கதையில தான் அவர் வில்லன். உன் கதைலயாவது அவர் ஒரு கேரக்டர் ரோல் செஞ்சுட்டு போகட்டும்” என வர்ஷிணி பட்டென சொல்லவும் ரஞ்சனியின் முகம் பேய் அறைந்தார் போல ஆனது. “என்னடீ வில்லன் அது இதுங்கற” எனப் பதறினாள். என்ன சொல்வது என ஒரு நொடி திகைத்து, “ப்ச்… அதில்லக்கா, உன் நிச்சயதார்த்தத்துக்கு, என்ன கார்னர் பண்ணி கூட்டிட்டு வந்தார் இல்ல, அதச் சொன்னேன்” எனச் சிரித்தாள் வர்ஷிணி. “ஷ்… பா… ஆனா ஒரு உண்மைய சொல்லட்டுமா” “என்னக்கா பில்ட்-அப் கொடுக்கற?” “உண்மையல அதுக்கு ஸ்கெட்ச் போட்டதே கிருஷ்ணாதான்” “எதே…” “ஆமாம்டீ… நீ நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு வரமாட்டன்னு நான் ஸ்ரீதர் கிட்ட சொல்லி ஃபீல் பண்ணானா? அதுல ஃபீல் ஆகி அவர் கிருஷ்ணா கிட்ட சொன்னாரா! அவர் க்ளீனா ஐடியா பண்ணி உன்ன சரியான டைம்க்கு அங்க அள்ளிட்டு வந்து போட்டாரு” எனச் சொல்லிச் சிரித்தாள் ரஞ்சனி, தன்னை மறந்து சத்தமாக. ஆனாலும் கோபம் வரவில்லை, கிருஷ்ணாவின் அந்தச் செயல் அவளை ரசிக்கவே வைத்தது. “அடக் கூட்டுக் களவாணிகளா” என வாயைப் பொத்திக் கொண்டாள் வர்ஷிணி. அவர்களிருவரும் பேசிக்கொள்வது வார்த்தைகளாக இல்லாமல் வெறும் ஒலி வடிவமாக மட்டுமே வெளியில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவை அடைந்தது. ‘அட… ரஞ்சனி கூட இப்படிச் சிரிப்பாளா? பரவால்ல, வந்த கொஞ்ச நேரத்துல அக்காவ இப்படிச் சிரிக்க வெச்சிடுச்சு இந்த அராத்து" என எண்ணினான். அதே நேரம், அவனுடைய அம்மா மட்டும் இந்த நேரம் இங்கே இருந்தால், பாவம் ரஞ்சனி என்றும் அவனுக்குத் தோன்றாமல் இல்லை. மகன்கள் சத்தமாகச் சிரித்தாலே, ‘டேய், இப்படியெல்லாம் சிரிக்காதீங்கடா, உடனே துக்கப் படும்படியா ஏதாவது நடந்து தொலையும்’ என அடக்குவார். ஆனாலும் கூட இப்படி ஓர் இறுக்கமான சூழலில் வாழ்வது எவ்வளவு கொடுமை என அவன் உணரவே இல்லை. இந்தளவுக்காவது யோசிக்கிறான் என்றால் அது சுப்ரியா அவனுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போன பாடம்தான் காரணம். அவனுடைய முகத்துக்கு நேராக வர்ஷிணி கை அசைக்க, உறைநிலையிலிருந்து கலைந்து அவள் நீட்டிய காபிக் குவளையை, “தேங்க்ஸ்” என்றபடி வாங்கிக் கொண்டான். மறுபடியும் சமையல் அறைக்குள் வந்து தனக்கான காபியை எடுத்துக் கொண்டவள், இருக்கையில் அமர்ந்திருந்த ரஞ்சனிக்கு அருகில் நின்று, “ஏன் கா, உன் மச்சினன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காரு?” என்று கேட்டாள். “பாவம்டீ… அந்த சுப்ரியா கூட இவருக்கு ப்ரேக்-அப் ஆயிடுச்சு. அதுல இருந்து இப்படித்தான் இருகாரு” என அவள் பதில் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், கார் ஹாரன் ஒலி கேட்டது. “ஹேய், அத்தான் வந்துட்டாரு, வா” என்றபடி காபியைக் கூட முழுதும் குடித்து முடிக்காமல் வெளியில் ஓடினாள். வர்ஷிணியும் கூடவே போக, காரை நிறுத்திவிட்டு வந்தான் ஸ்ரீதர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, ரஞ்சனி உதவி செய்ய, இரவு உணவைத் தயார் செய்தாள் வர்ஷிணி. கிருஷ்ணா பிறகு சாப்பிடுவதாகச் சொல்லிவிட, அவனுக்கான உணவை ஹாட் பேக்கில் போட்டு எடுத்துவைத்துவிட்டு, மற்ற மூவரும் அமர்ந்து உண்டு முடித்தனர். மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட டியூப்லக்ஸ் வில்லா அது. அதில் ஒன்று கிருஷ்ணாவின் அறை. தங்கள் அறையிலேயே அவளைப் படுத்துக்கொள்ளும்படி ரஞ்சனி சொல்ல, “பரவால்லக்கா, ஹால்லையே படுத்துக்கறேன்” என திட்டவட்டமாக மறுத்தாள். ஸ்ரீதர் சொல்லிப்பார்த்தும் அவள் மறுக்கவே, அவர்களுடைய அம்மாவின் அறையில் தங்கும்படி சொன்னான். “பரவால்லங்க, அத்த ஏதாவது சொல்லப் போறாங்க” என ரஞ்சனி கிசுகிசுக்க, “பரவால்ல ரஞ்சனி, உங்க சிஸ்டர் உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்காங்க. அவங்கள சங்கடப் படுத்தக் கூடாது. அம்மாட்ட நான் பேசிக்கறேன்” என்று சொல்லிவிட்டான் கிருஷ்ணா. ரஞ்சனியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, அவளுடைய அறையில் இருந்த தன் பெட்டியைக் கொண்டுபோய் அங்கே வைத்துவிட்டு வந்தாள். அதன் பிறகு, சமையல் அறையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தவளுக்கு கண்ணைக் கட்டியது. ‘ஒரு நாள் டின்னர் செஞ்சு முடிச்சி, கிச்சன் கிளீன் செய்யவே இவ்வளவு கடுப்பா வருதே, தினமும் இந்த ரஞ்சனி எப்படி சமாளிக்கறா? பாவம் அவளுக்கு பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட் வேற போயிட்டு இருக்கு. அவளோட மாமனார், மாமியார் இல்லாதப்பவே இப்படி! இந்த அழகுல போனா, அவளுக்கு எப்படிக் குழந்தை நிக்கும்?’ என்றுதான் அவனின் மண்டையைக் குடைந்தது. போய் படுத்தால், நெற்றியிலிருந்த காயம் கொடுத்த வலியில் அவளுக்கு உறக்கமே வரவில்லை. அத்தோடில்லாமல் புதிய சூழ்நிலை வேறு. கைப்பேசியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடி நோக்கிப் போனாள். அங்கே, வானத்தை வெறித்தபடி தனிமையில் அமர்ந்திருந்தான் கிருஷ்ணா. கையில் இருந்த குவளையில் தகதகத்தது உயர்ரக மதுபானம். அவள் வந்த அரவம் கேட்டு, அவன் பார்வை அவள்மீது பாய, பழைய சம்பவங்களின் நினைவில் உள்ளுக்குள்ளே பக்கென்று ஆனது வர்ஷிணிக்கு.Like
- Isaithene! - இசைத்தேனே!வணக்கம் அன்புத் தோழமைகளே, எபி தாமதமானத்திற்கு மன்னிக்கவும். கடந்த சிலபல மாதங்களாகவே, மகன்களின் 10th. 12th, JEE மற்றும் ஏனைய போட்டித் தேர்வுகள், 11th மற்றும் கல்லூரி அட்மிஷன், மூத்தவனின் வெளிமாநில பிளேஸ்மென்ட் ட்ரைனிங் எனத் தலை சுற்றிப் போனதுதான் மிச்சம். இப்பொழுதுதான் மூச்சுவிடக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது. அடுத்த பதிவுகளுடன் வந்துவிட்டேன். ஆலங்கட்டிமழை வரூ & கிருஷ்ணாவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட். மினி எபிதான், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள மறக்காதீங்க. இதோ எபி, இசைத்தேனே - 7 இசைத்தேனே 8 & AKM 15 நட்புடன், KPN
- Isaithene! - இசைத்தேனே!இசைத்தேனே - 6 வணக்கம் அன்புத் தோழமைகளே... இந்தப் பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
