
Isaithene - 1
வணக்கம் அன்புத் தோழமைகளே!
நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு புது கதையின் அத்தியாயத்துடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
'இசைத்தேனே' போன புத்தகக் காட்சிக்கே நேரடி புத்தகமா ரிலீஸ் பண்ணனும்னு ஆரம்பிச்ச கதை. அதைச் செய்ய முடியாம போச்சு. கிண்டில்ல ஏற்கனவே போட்டுட்டு இருக்கேன். சரி, சைட்லயும் போட்டுடலாம்னு தோணிச்சு. இதோ போட்டுட்டேன்.
அப்பறம், ஒரு சின்ன தற்பெருமை...
இந்தக் கதையின் நாயகன் ஒரு இசை அமைப்பாளர், நாயகி இசை ஆசிரியர் / பாடகர். கதையும் இசை சம்பந்தமானது. கதையின் மூலாமாக இடம்பெறும் பாடல்களுக்கு சினிமா பாடல்களை இதுல உபயோகிக்க எனக்கு விருப்பம் இல்ல. அதனால சொந்தமா பாடல்கள் எழுதி இருக்கேன். (Strictly Copyright Protected)
ஆலங்கட்டிமழை என்ன ஆச்சுன்னு மட்டும் தயவு செஞ்சு கேட்டுடாதீங்க... ஏன்னா... இப்போதைக்கு அது வேற ஏரியா
இந்தக் கதை இப்போதைக்கு வாரம் 2 எபிசொட் போடலாம்னு இருக்கேன்.
சீக்கிரமே பழைய பன்னீர்செல்வமா ஃபார்முக்கு திரும்ப வந்து, இந்த இரண்டு கதைகளையுமே தொடர முயற்சி செய்யறேன்.
படிச்சிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துக்க மறக்காதீங்க.
நட்புடன்,
KPN