வணக்கம் அன்புத் தோழமைகளே!
முந்தைய பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஒருவழியாக (இந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருக்கத்தான் பார்க்கிறேன், முடியவில்லை.) அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன்.
திங்களன்றே போடவேண்டும் என நினைத்தேன். என் இரண்டாவது மகன் கிஷோருக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கிவிட்டது. அவனுக்கு சப்போர்ட் கொடுக்கவேண்டிய சூழல். மாமியாருக்கு ஏற்பட்ட சிறு விபத்தால் அவர்க்கும் கவனம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. கூடவே கணவருக்கும் ஜூரம்வந்து அந்த கவலையும் சேர்ந்துகொண்டது. இவற்றுக்கு நடுவில் நேற்றே எபி டைப் செய்து முடித்தேன். பிழை திருத்தம் செய்து பதிவிட நேரம் ஒதுக்க இயலவில்லை. நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒரு மரணம். அவர்களுக்காக எங்கள் வீட்டில் உணவு தயாத்திரித்து கொடுத்தோம். எல்லாம் முடிந்து, கொஞ்சம் நேரம் கிடைக்க, இதோ பதிவிடுகிறேன்
பொதுவாக இதையெல்லாம் இங்க சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனாலும் ஒவ்வொரு பதிவுக்கும் உங்களைக் காக்க வைப்பதில் சற்று வருத்தமாக இருக்கவே சொல்லிவிட்டேன்.
நேரம் அமைந்தால் அடுத்த எபி உடனே வரும்.
இதோ எபி...
Nilamangai - 9
Wow awesome