
வணக்கம் அன்புத் தோழமைகளே!
நிலமங்கை அடுத்த எபி போட்டிருக்கேன்.
ஒரு கதை என்னை வைத்துச் செய்கிறது என்றால் அது இந்த நிலமங்கை மட்டும்தான்.
ஏன்தான் இந்தக் கதையை தொடங்கினோமோ என என்னைப் புலம்பவைத்த கதை இது மட்டும்தான்.
என் மனதை ஆள வா நாவல் கொடுத்த வெற்றிக் களிப்பில், 12/09/2020இல் நிலமங்கையின் முதல் எபியை தளத்தில் போட்டேன். அந்த நேரம் பார்த்துத்தான் இந்த வீணாய்ப்போன கொரோனா உச்சத்தைத் தொட்டது. அதைவிட, எதிர்பாரா நேரத்தில் ஏற்பட்ட அப்பாவின் மரணத்தால் கதையைத் தொடர மனமில்லாமல் போனது. காரணம் அவர் ஆசையாசையாக படிக்கத் தொடங்கி, அடுத்த எபிசோட் ஏன் போடல எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
ஒரு வழியாகத் தெளிந்து எழுதத் தொடங்கி, அடுத்து 2nd episode பிப்ரவரி 8 2021,, 3வது எபிசொட் 12 பிப்ரவரி, 4ஆவது எபி 17 பிப்ரவரி, என ஹாட்ரிக் அடித்து, 5 ஆவது எபி போட்டது ஏப்ரல் 1 2021. என் சித்தி, அக்காவின் கணவர், இரண்டாவது தங்கையின் கணவர் என அதே ஏப்ரலில் ஒரே வாரத்துக்குள் நிகழ்ந்த மூன்று மரணங்கள் + நம் மூத்த வாசகர் பானும்மாவின் மரணம் எனச் சுலபத்தில் மீள முடியாமல் போனது.
எப்படியோ முயன்று ஆறாவது எபி போட 13 ஜனவரி 2022 .ஆகிப்போனது. கதையின் அடுத்த பதிவை எழுத நினைத்தாலே அப்பாவின் நினைவு. அத்திம்பேர் வேறு என் எபிஸோட்ஸ் போட்ட உடன் படிப்பவர், அவரது இழப்பு, நம் பானும்மாவின் ஞாபகம் என மனதைப் போட்டுத் தாக்க, அவ்வளவுதான், சோலி முடிஞ்ச். பிறகு இந்தக் கதையை எழுதவே பிடிக்கவில்லை. எப்படியோ எழுதியே தீரவேண்டும் என்ற முடிவில் இப்பொழுது மீண்டும் கையில் எடுத்திருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுவதற்காக, மறுபடியும் பழைய எபிசோட்ஸை படிக்கும்போதுதான் உரைக்கிறது, 'இது ஆன்டி ஹீரோ கதையில்லை'ன்னு நான் சத்தியம் செஞ்சு சொன்னாக்கூட நீங்க யாரும் நம்பவே போறதில்லன்னு, ஸோ, நான் இதை மறுக்கவே முடியாது, 'நிலமங்கை' ஒரு ஆன்டி ஹீரோ கதைதான்.
அதனால நம்ம சைலன்ட் ரீடர்ஸ்க்கு நான் என்ன சொல்ல வரேன்னா, எபிஸோட்ஸ் போட்டதும் படிச்சிட்டு, சைலன்டா இருந்துடாதீங்க. நீங்க கமெண்ட்ல வந்து உங்க கருத்தை சொன்னால் மட்டுமே அடுத்தடுத்த எபிசொட்ஸ் எழுத எனக்கு மனம் வரும்.
இப்போதைக்கு எபிசொட் 5 இதோ...
ஆன்டி ஹீரோ வா 🤔🤔